ஈரோட்டில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் ஆய்வு

Erode news- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் தூய்மைப் பணியாளர் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (6ம் தேதி) நடைபெற்றது.

Update: 2024-07-06 10:45 GMT

Erode news- தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், ஈரோடு மாநகராட்சி மரப்பாளையம், ஜீவானந்தம் சாலையில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் அடுக்குமாடி குடியிருப்புகளுக்குச் சென்று கோரிக்கையினை கேட்டறிந்தார். உடன் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.

Erode news, Erode news today- ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் தூய்மைப் பணியாளர் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் இன்று (6ம் தேதி) நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தலைமையில் தூய்மைப் பணியாளர் நலன் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்.


இக்கூட்டத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் தெரிவித்ததாவது, தூய்மை பணியாளர்கள் நல ஆணையம் என்பது தூய்மை பணியாளர்களின் குறைகளை கண்டறிந்து நிறைவேற்றுவது மட்டுமல்லாது அவர்களது வாழ்வியலை உயர்த்துவதே இதன் முக்கியமான நோக்கமாகும். தூய்மை பணியாளர்களுக்கான அடிப்படை வசதி, ஊதியம் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்.

தூய்மை பணியாளர்களின் குடியிருப்புகளில் தூய்மை பணியாளர்களின் குறைகளை கேட்டறிந்து 100 சதவீதம் தீர்வு காண வேண்டும். அவர்களது வீடு, குழந்தைகள் கல்வி, குடியிருப்பு பகுதியில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தூய்மைப் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்ற இவ்வாணையத்தின் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் தூய்மை பணியாளர்களுக்கான ஊதியம் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருவதையும், நேரடியாக வங்கிக்கணக்கிற்கு வரவு வைக்கப்படுகிறதா? என்பதையும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். தூய்மை பணியாளர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, கட்டாயமாக மருத்துவ முகாம் நடத்த வேண்டும்.


வருடத்திற்கு ஒருமுறை மருத்துவ முகாம் நடத்தப்பட்டு அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், அவர்களது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் சுயத்தொழில் தொடங்க அரசு கடனுதவி வழங்குகிறது. தூய்மை பணியாளர்களின் மீது தனி கவனம் செலுத்தி, அரசின் திட்டங்கள் அனைத்தும் சென்றடைவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

தூய்மை பணியாளர்களுக்கான பி.எப், இ.எஸ்.ஐ போன்றவை முறையாக பிடித்தம் செய்யப்படுவது குறித்து தகவல் அளிக்க வேண்டும். ஒப்பந்த முறையில் தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்தும் தனியார் நிறுவனங்கள் அவர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், கையுறைகள், மருத்துவ வசதிகளை அளிக்க வேண்டும். இதில் விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

ஈரோடு மாநகராட்சியில் நான்கு மண்டல அலுவலகங்களிலும் தூய்மை பணியாளர்கள் தங்களது குறைகளை தெரிவிக்க புகார் பெட்டி வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் கடந்த மே 29ம் தேதி, ஜூன் 8ம் தேதி மற்றும் 14ம் தேதிகளில் நடத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணியாளர்களுக்கு தகுந்த பயிற்சிகள், போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு, தடுப்பு ஊசிகள் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


மேலும், தூய்மை பணியாளர்களுக்கு ஷூ அல்லது காலணி, மழைக்காலங்களில் ரெயின் கோட் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்கள் புகார் தெரிவிக்க 14420 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தார். முன்னதாக, அவர் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட, மரப்பாலம் ஜீவானந்தம் சாலையில், தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மனிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆணையர் (ஈரோடு மாநகராட்சி) சரவண குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரத்துல்லா, மாநகர நல அலுவலர் பிரகாஷ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News