ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.;

Update: 2024-03-17 12:05 GMT

தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையில் நடைபெற்றது.

அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலையில் தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் சக்தி நகரில் செயல்பட்டு வரும் சக்தி சர்க்கரை ஆலையில் 53வது தேசிய தொழிலாளர் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. சர்க்கரை  ஆலையின் தலைவரும் உப.தலைவருமான திருவேங்கடம் தலைமையில் கொடியேற்றி விழா தொடங்கி வைக்கப்பட்டது.

ஒரு வாரம் நடைபெற்ற இந்த விழாவின் நிறைவு நாளன்று, தமிழக அரசின் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் வினோத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  தேசிய தொழிலாளர் பாதுகாப்பு குறித்த விவரங்களை எடுத்துரைத்தார். விழாவில், மனிதவளம் மற்றும் நிர்வாக துணை பொது மேலாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார்.

விழாவில் ஆலை தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.  பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சக்தி சர்க்கரை ஆலையின் தலைவரும் சிறப்பு விருந்தினர்களும் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

விழாவில் ஆலை தொழிலாளர்களின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News