பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் பறிமுதல்: 3 பேர் கைது

Erode news- ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரைகளை வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா சாக்லெட்டுகளும் சிக்கின.;

Update: 2024-05-14 04:45 GMT

Erode news- 3 பேர் கைது (பைல் படம்).

Erode news, Erode news today- பெருந்துறையில் வாகன சோதனையில் போதை மாத்திரைகளை வைத்திருந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா சாக்லெட்டுகளும் சிக்கின.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகே பெருந்துறை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பவானி சாலையில் சந்தேகப்படும் படியாக இருசக்கர வாகனங்களில் வந்த 3 வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா சாக்லேட், வலி நிவாரண மாத்திரைகளும், ஊசிகள் போன்றவை இருந்தன.

இதையடுத்து அவர்களை போலீஸ் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மதுரை சோழவந்தான் பகுதியை சேர்ந்த மனோகரன் (வயது 21), திருப்பூர் பழனி கோவில் வீதியை சேர்ந்த தாரனேஷ் (வயது 20), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடுவை சேர்ந்த 18 வயது இளைஞர் ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் ஒரே அறையில் தங்கி திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.

கஞ்சா சாக்லேட், வலி நிவாரண மாத்திரைகளை, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இருந்து வாங்கி சென்று போதைக்காக பயன்படுத்துவதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து கஞ்சா சாக்லேட், வலி நிவாரண மாத்திரைகள், ஊசிகள், இருசக்கர வாகனம் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News