அந்தியூர் அருகே அரசு பேருந்தை வழிமறித்து ரகளை செய்த போதை ஆசாமிகள் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட மதுபோதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-09-08 01:15 GMT
கைது செய்யப்பட்ட இருவரையும் படத்தை காணலாம்.

அந்தியூர் அருகே அரசு பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்ட மதுபோதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இருந்து கள்ளிமடைக்குட்டைக்கு கே2 அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை பெருந்தலையூரை சேர்ந்த கருணாகரன் (வயது 52) என்பவர் ஓட்டினார். நடத்துநராக ரங்கசாமி (வயது 46) என்பவர் இருந்தார்.

இந்நிலையில், அந்தியூரை அடுத்த பாறையூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பேருந்தை வழி மறித்தனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்து செல்ல நேரமாகிறது. ஓரமாக நின்று பேசுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதற்கு, அவர்கள் 2 பேரும் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் ரகளையில் ஈடுபட்டதுடன், தகாத வார்த்தைகளாலும் திட்டியதோடு, கைகளால் அடித்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் ரகளையில் ஈடுபட்டவர்கள் அந்தியூர் மைக்கேல்பாளையத்தை சேர்ந்த சார்லஸ் (வயது 34), ஆசிரியர் காலனியை சேர்ந்த லியோ சகாயமுத்து (வயது 25) ஆகிய 2 பேர் என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News