யோகா போட்டி: ஈரோடு நந்தா சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம்..!

மாநில அளவிலான யோகா போட்டியில் ஈரோடு நந்தா சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

Update: 2024-04-21 07:45 GMT

ஈரோடு யோகா அசோசியேஷன் சார்பில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர்கள் பிரகாஷ் நாயர் மற்றும் ராஜேஷ் ஆகியோர் சிறப்பு பரிசுகளை வழங்கி பாராட்டும் காட்சி.

மாநில அளவிலான யோகா போட்டியில் ஈரோடு நந்தா சென்ட்ரல் பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.

ஈரோடு யோகா அசோசியேஷன் சார்பில் 14 வயதிற்குள்பட்ட மாணவர்களுக்கு மாநில அளவிலான யோகா போட்டி கோபியில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஈரோடு நந்தா சென்ட்ரல் மெயின் பள்ளியைச் சேர்ந்த 100 மாணவர்கள் உள்பட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் பங்கேற்றனர். பல்வேறு சுற்றுகளைக் கடந்து இறுதிப்போட்டிக்கு இப்பள்ளியைச் சேர்ந்த 30 மாணவர்கள் தகுதி பெற்றனர்.

இறுதிப் போட்டியின் முடிவில் 10 மாணவர்கள் முதல் இடத்தினையும், 8 மாணவர்கள் இரண்டாம் இடத்தினையும் மற்றும் 7 மாணவர்கள் மூன்றாம் இடத்தினையும் பிடித்தனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் முதல்வர்கள் பிரகாஷ் நாயர், ராஜேஷ் ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.சண்முகன், செயலர் எஸ்.நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.திருமூர்த்தி, நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி எஸ்.ஆறுமுகம், நிர்வாக அதிகாரி மனோகரன் மற்றும் யோகா ஆசிரியர் ஆறுமுகவேல் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டினர்.

Tags:    

Similar News