பெருந்துறை அருகே பெண் மர்ம சாவு: போலீசார் விசாரணை
பெருந்துறை அருகே தோட்டத்து கிணற்றில் மோட்டார் போட சென்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை.;
பெருந்துறை அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பூபதி (வயது 50). இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில், இன்று காலை பூபதி தோட்டத்து கிணற்றில் மோட்டார் போடுவதற்காக சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வரவில்லை. இதனால் ராமசாமி மோட்டார் அறை அருகே சென்று பார்த்தார். அப்போது பூபதி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இந்நிலையில், பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம், குறித்து பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.