மழையால் சேறும், சகதியுமான ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட்..!
மழை காரணமாக ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வியாபாரிகள், மக்கள் தவித்து வருகின்றனர்.
மழை காரணமாக ஈரோடு வ.உ.சி. நேதாஜி காய்கறி மார்க்கெட் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வியாபாரிகள், மக்கள் தவித்து வருகின்றனர்.
ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று (7ம் தேதி) மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொடர்ந்து, நேற்று இரவு முதல் நள்ளிரவு வரை விடிய விடிய மழை தூறிக் கொண்டு இருந்தது. இதன் காரணமாக, ஈரோடு வ.உ.சி நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்று சேரும் சகதியுமாக காட்சியளித்தது.
இந்நிலையில், இன்று (8ம் தேதி) காலை காய்கறிகள் வாங்க மொத்த வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்தனர். அப்போது, மார்க்கெட் சேறும், சகதியுமாக இருந்ததால் அதில் நடக்க முடியாத சூழல் உருவானது. காய்கறி வாங்க வரக்கூடிய வியாபாரிகள், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால், மார்க்கெட்டிற்கு வரும் மக்களின் வரத்தும் குறைந்தது.
மேலும், சேரும் சகதிகளில் வாகனங்களை கொண்டு செல்வதில் திணறினர். மழை பெய்தாலே மார்க்கெட்டில் சேரும் சகதியமாக தொடர்ந்து காட்சியளிக்கும் அவல நிலை இருந்து வருகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.