மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நடத்தினர்.;

Update: 2024-03-05 10:28 GMT

மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை மாற்றுத்திறனாளிகள் நடத்தினர்.

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மொடக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் செவ்வாய்க்கிழமை (இன்று) காலை 11 மணிக்கு நடைபெற்றது. ஈரோடு கோட்டாட்சியர் மாதாந்திர மாற்றுத்திறனாளிகள் குறைதீர்ப்பு கூட்டத்தை கொடுமுடி, மொடக்குறிச்சி, ஈரோடு, பெருந்துறை வட்டாட்சியர் அலுவலகங்களில் நடத்த வேண்டும். 

100 நாள் வேலை திட்டத்தில் நான்கு மணிநேர வேலைக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இணைவு சக்கர வாகனங்களுக்கு லைசன்ஸ் வழங்க முகாம் நடத்த வேண்டும். பேருந்து, ரயில் பாஸ் போன்றவைகளில் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் சான்றிதழிட்டு தரவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் தாலுகா செயலாளர் சொங்கப்பன் தலைமை தாங்கினார். அகில இந்திய செயல் தலைவர் அன்பு ராஜன் மாவட்டத் துணைத் தலைவர் மாரிமுத்து,  கொடுமுடி தாலுகா செயலாளர் சசி, மாவட்ட குழு உறுப்பினர் ரேணுகா, மாவட்ட பொருளாளர் ராஜு, மாவட்டத் துணைத் செயலாளர் சேகர், ஈரோடு உழைக்கும் மக்கள் தொழிற்சங்க பொதுச்செயலாளர் முருகேசன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் லோகநாதன் உள்பட மாற்றுத்திறனாளிகள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News