சத்தி அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தையை வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடன் ரசித்து சென்றனர்.;
சத்தியமங்கலம் அருகே கடம்பூர் மலைப்பாதையில் சாலையோரம் படுத்திருந்த சிறுத்தையை வாகன ஓட்டிகள் அதிர்ச்சியுடன் ரசித்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்தநிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வனச்சாலை வழியாக கடம்பூரை சேர்ந்த மக்கள் சிலர் இரவு ஜீப்பில் கடம்பூருக்கு சென்று கொண்டு இருந்தனர்.
கடம்பூர் அருகே ஜீப் வந்த போது சிறுத்தை ஒன்று சாலையின் ஓரமாக படுத்து இருப்பதை பார்த்து ஜீப் டிரைவர் உடன் வந்த சிலரும் வாகன வெளிச்சத்தில் பார்த்து அச்சமடைந்தனர். வாகனத்தில் இருந்தவர்கள் செல்போனில் சிறுத்தையை வீடியோ எடுத்தனர். சிறிது நேரத்தில் சத்தம் கேட்டதும் சிறுத்தை வனப்பகுக்குள் சென்று மறைந்தது. இந்த காட்சி வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து வனத்துறையினர், கடந்த சில நாட்களாக கடம்பூர் மலைப்பாதை சாலையில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, மலைப்பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.