ஈரோட்டில் தாயமங்கை விளையாட்டு போட்டி
ஈரோட்டில் தாயமங்கை விளையாட்டு போட்டி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்றது.
ஈரோட்டில் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில், ஈரோடு ஜேசிஐ எலைட், ஸ்ரீ சிகரம் ஆடைகள் மற்றும் ஈரோடு அகாடமி இணைந்து நடத்திய தாயமங்கை போட்டி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) நடைபெற்றது.
போட்டியை ஜேசிஐ எலைட் முன்னாள் தலைவர் தீபக் தொடங்கி வைத்தார். ஜேசிஐ எலைட் தலைவர் கே.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் ஏழு வயது முதல் 70 வயது உள்ள பெண்கள் மேற்பட்டோர் பங்கேற்று தாயக்கரம் விளையாடினார்கள். நடுவராக ரம்யா பங்கேற்றார்.
இதில் நான்கு சுற்றுகள் விளையாடப்பட்டது. இதில், வெற்றி பெற்ற இரண்டு நபர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் இரண்டாயிரமும், இரண்டாம் பரிசாக ஆயிரத்து ஐநூறு ரூபாய் இரண்டு பேருக்கும், மூன்றாம் பரிசாக ஆயிரம் ரூபாய் இரண்டு நபர்களுக்கும், ஆறுதல் பரிசாக கலந்து கொண்ட அனைவருக்கும் நிச்சய பரிசு வழங்கப்பட்டது.
பரிசு வழங்கும் நிகழ்ச்சியில், ஜேசிஐ எலைட் மகளிர் அணி மண்டல இயக்குனர் டாக்டர் ஷர்மிளா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.