சென்னிமலை பகுதிகளில் நாளை (16ம் தேதி) மின்சாரம் நிறுத்தம்
சென்னிமலை அருகே உள்ள பெரியாண்டிபாளையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை புதன்கிழமை நடைபெற உள்ளது.;
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(16ம் தேதி) நடைபெற உள்ளது. இதனால், பெருந்துறை கோட்டத்தை சார்ந்த ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம்,பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி,வாய்பாடி புதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம்,அக்கரையம்பாளையம், கரட்டுப்பாளையம், செலம்பகவுண்டம்பாளையம்,புதுப்பாளையம், திப்பம்பாளையம், வெங்கமேடு, ஆலமரம், கொடுமணல், பழனி ஆண்டவர் ஸ்டீல்ஸ் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.