ஈரோடு மாவட்டத்தில் 9 பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவியேற்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர், நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.;

Update: 2022-03-05 00:30 GMT

மொடக்குறிச்சி, அரச்சலூர், அவல்பூந்துறை, வடுகபட்டி, சிவகிரி, கொல்லன்கோயில், பாசூர், வெள்ளோட்டாம்பரப்பு, கிளாம்பாடி ஆகிய 9 பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவியேற்றுக் கொண்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மொடக்குறிச்சி பேரூராட்சியில் 10வது வார்ட்டி வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த செல்வாம்பாள் சரவணன், போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவர் பதவிக்கு 12 வது வார்டில் திமுகவில் வெற்றி பெற்ற கார்த்திகேயனும் 2வது வார்டு சுயேச்சை வேட்பாளராக வெற்றிபெற்ற பரிமளா தேவியும் போட்டியிட்டனர். இதில் 10 வாக்குகள் பெற்று கார்த்திகேயன் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவல்பூந்துறை பேரூராட்சியில்,  15-வது வார்டு திமுக உறுப்பினர் ராதாமணி அவல்பூந்துறை பேரூராட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் 5-வது வார்டு மதிமுகவை சேர்ந்த சோமசுந்தரம் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அரச்சலூர் பேரூராட்சியின் தலைவராக 2வது வார்டு வெற்றி பெற்ற திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக 1வது வார்டில் வெற்றி பெற்ற மதிமுகவின் துளசிமணி துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வடுகப்பட்டி பேரூராட்சியில் தலைவராக 2வது வார்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற அம்பிகாபதி தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் துணைத்தலைவராக 13வது வார்டு திமுக உறுப்பினர் குழந்தைசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கொல்லன்கோயில் பேரூராட்சியில் 6வது வார்டு வெற்றிபெற்ற திமுகவைச் சேர்ந்த சந்திரசேகர் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவராக 1-வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிவகிரி பேரூராட்சியில் 1-வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த பிரதீபா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல் துணைத்தலைவராக 15வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த கோபால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சியில் 8வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த சத்யா சண்முகம் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் 15வது வார்டில் திமுகவில் வெற்றி பெற்ற ஜெயச்சந்திரன் துணைத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கிளாம்பாடி பேரூராட்சியின் 9வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த அமுதா தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் துணைத் தலைவராக 11 வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த சொக்கலிங்கம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பாசூர் பேரூராட்சியில் 6வது வார்டில் வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த பழனியம்மாள் போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல் துணைத்தலைவராக 10வது வார்டில் வெற்றிபெற்ற திமுகவைச் சேர்ந்த ராமமூர்த்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tags:    

Similar News