திருமணமான பத்தே நாட்களில் பரிதாபமாக உயிழந்த புதுப்பெண்

மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளி மானூரில் திருமணமான பெண் பத்தே நாளில் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-22 16:45 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுக்கா ஈங்கூர் கிழக்கு கொங்குநகரை சேர்ந்தவர் மனோகரன். இவரது ஒரே மகள் சௌமியா(வயது 25) பட்டதாரி. இவருக்கும் மொடக்குறிச்சியை அடுத்த நஞ்சை ஊத்துக்குளி மெயின்ரோட்டைச் சேர்ந்த பிரவீன்குமார் என்ற வங்கி பணியாளருக்கும் கடந்த 11ம் தேதி வெள்ளோடு அண்ணமார் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்துள்ளது.இந்நிலையில் நேற்று பகலில் நஞ்சை ஊத்துக்குளியை அடுத்த மானூரில் மணமகன் வீட்டில் சம்மந்தி விருந்து நடந்ததுள்ளது. அந்த விருந்தில் கலந்து கொண்ட மணமகள் செளமியாவின் அப்பா மனோகரன் மாலை 5 மணி வரை விருந்தில் கலந்து கொண்டு விட்டு அவரது ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் இரவு 11.30 மணிக்கு அவரது சம்பந்தி மனோகரனை போனில் அழைத்துள்ளார். அப்போது மனோகரனிடம். மணமகள் சௌமியாவுக்கு இடைவிடாமல் இருமல் வந்ததாகவும் அதற்காக அவர் தண்ணீர் குடித்தபோது மயங்கி விழுந்து விட்டதாக கூறினார். மமயங்கிய சௌமியாவை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அங்கிருந்த மருத்துவர் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறியதாகவும்,  உடனடியாக அரசு மருத்துமனைக்கு சௌமியாவை கொண்டு சென்று சேர்த்ததாகவும், அங்கு சௌமியாவை பரிசோதித்த மருத்துவர் அவர் வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து சௌமியா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மனோகரன் அங்கு சென்று சௌமியாவுக்கு நடந்த நிகழ்வை எண்ணி கதறி அழுதார். பின்னர் இன்று சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில் தனது மகள் இறப்பு சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளார். அதன்பேரில் மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News