சிவகிரி துணை மின்நிலையத்தில் 15-ம் தேதி மின்நிறுத்தம்
சிவகிரி துணை மின்நிலையத்தில் வரும் திங்கட்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்நிறுத்தம் செய்யப்படும்.;
சிவகிரி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 15-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்காட்டு வலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டு வலசு, கோவில்பாளையம், ஆயபரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன் கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு,வடுகபட்டி, 24 வேலம்பாளையம், பண்ணைக்கிணறு, கரட்டு புதூர், காட்டுபாளையம் மற்றும் ராக்கம்மா புதூர், இச்சிபாளையம், முத்தையன் வலசு, கருக்கம்பாளையம், ஊஞ்சலூர், ஒத்தக்கடை, வடக்கு புதுப்பாளையம், அஞ்சூர், குருக்கு வலசு, நம்ம கவுண்டன்பாளையம், வள்ளியம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை ஈரோடு மின் வாரிய செயற் பொறியாளர் முத்துவேல் தெரிவித்தார்.