ஈரோடு மொடக்குறிச்சியில் தாமரை மலர்ந்தது
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் அதிமுக கூட்டணியில், பா.ஜ.க வேட்பாளர் சரஸ்வதி வெற்றி பெற்றார்.;
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் சரஸ்வதி வெற்றி பெற்றார்.
மொத்தம் 24 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சி.சரஸ்வதி 78125 வாக்குகள் பெற்றார். திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் 77844வாக்குகள் பெற்றார்.
இதன் மூலம், பா.ஜ.க வேட்பாளர் சி.சரஸ்வதி 281வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.