ஈரோடு அருகே மொடக்குறிச்சி ஒன்றியப் பகுதியில் வளர்ச்சிப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு

வளர்ச்சிதிட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரவேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Update: 2023-06-01 07:15 GMT

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கோண்ட மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் கன்கரா

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி பகுதிகளில். ரூ.5.05 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்,

ஈரோடுமாவட்டம், மொடக்குறிச்சி ஊராட் சி ஒன்றியத்திற்குட்பட்ட மொடக்குறிச்சி, நஞ்சைஊத்துக்குளி, புஞ்சை காளமங்கலம், கணபதிபாளையம், ஈஞ்சம்பள்ளி, எழுமாத்தூர் மற்றும் முத்துக்கவுண்டம்பாளையம் ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில்; ரூ.5.05 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா  நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ஊரகவளர்ச்சிமற்றும் ஊராட்சிதுறையின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள14 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட225 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன்படி மொடக்குறிச்சிஊராட்சிஒன்றியம், மொடக்குறிச்சி ஊராட்சி லக்காபுரம் பகுதியில் விரிவான பள்ளி உள் கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ்,ரூ.29.82 இலட்சம் மதிப்பீட்டில் நகராட்சி     நகர் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்கட்டும் பணியினையும்,

பள்ளி வளாகத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்,ரூ.5.90 இலட்சம் மதிப்பீட்டில் சமையல் கூடம் அமைக்கும் பணியினையும், மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட  மாதேஸ்வரன் நகர் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுதிட்டத்தின் கீழ்,ரூ.49.64 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வசதியுடன் கூடிய தார்சாலை அமைக்கும் பணியினையும், மொடக்குறிச்சிபகுதியில் ஒதுக்கப்பட்டவருவாய் திட்டப் பகுதிதிட்டத்தின் கீழ்,ரூ.307.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் மொடக்குறிச்சிஊராட்சிஒன்றிய அலுவலக கட்டிடத்தினையும், மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பெருமாபாளையம் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ்,ரூ.96.00 இலட்சம் மதிப்பீட்டில் தூரபாளையம் அங்கன்வாடி முதல் பெருமாபாளையம் வரை தார்சாலை அமைக்கும் பணியினையும்,

புஞ்சைகாளமங்கலம் ஊராட்சிசின்னம்மாபுரம் பகுதியில் தூய்மைபாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.7.10 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயசுகாதாரவளாகம் அமைக்கும் பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டு நடைபெற்றுவரும் வளர்ச்சிதிட்டப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரவேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  மேலும், கட்டுமானபணிகளுக்கு பயன்படுத்தும் மணல்,செங்கல்,சிமெண்ட் உள்ளிட்ட பொருட்களின் தரத்தினையும் ஆய்வுசெய்தார். 

மேலும்,முத்துக்கவுண்டம்பாளையம் ஊராட்சிபகுதியில் 15-வது நிதிக்குழுமானியதிட்டத்தின் கீழ்,ரூ.9.59 இலட்சம் மதிப்பீட்டில்; பாரதிநகர் விநாயகர் கோயில் முதல் முருகேசன் வீடுவரை இரண்டுமெட்டல் அமைத்துதார்சாலை அமைக்கப்பட்டுள்ளதையும் நேரில் சென்றுபார்வையிட்டுதார் சாலையின் தரத்தினையும் ஆய்வுசெய்தார்.

தொடர்ந்து,மொடக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்டமேம்படுத்தப்பட்ட அரசுஆரம்பசுகாதார நிலையத்தினை மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டு நோயாளிகளுக்குஅளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மற்றும் மருந்துகளின் இருப்புகள் குறித்தும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், சிகிச்சைக்காக வருகை புரிந்துள்ள நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மேலும்,மொடக்குறிச்சி கால்நடை மருத்துவமனையினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டு கால்நடைகளுக்குஅளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் மருந்துகளின் இருப்புகள் குறித்தும் கால்நடைமருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து, மொடக்குறிச்சி கிராமநிர்வாக அலுவலகத்தினை  பார்வையிட்டு பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகளையும் ஆய்வுசெய்தார்.

மேலும், ஈஞ்சம்பள்ளி ஊராட்சி, ஈஞ்சம்பள்ளி, முத்துகவுண்டம்பாளையம், ஆதிதிராவிடர் காலனியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு அமைக்கப்பட்டுள்ள  குடிநீர் இணைப்புகளையும் நேரில் சென்று    ஆய்வு மேற் கொண்டு அங்கு அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும் பார்வையிட்டு, குளோரின் பயன்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.  மேலும் , நஞ்சை ஊத்துக்குளி, ஐங்கரன் வலசுபகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வுசெய்தார்.

முன்னதாக, வேளாண்-பொறியியல் துறையின் சார்பில் கணபதிபாளையம்  ஊராட்சி, சாத்தாம்பூர் பகுதியில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின கீழ்,ரூ.3.59 இலட்சம் மதிப்பீட்டில் (மானியம் ரூ.1.43 இலட்சம்) சூரிய கூடார உலர்த்தி (சோலார்) அமைக்கப்பட்டுள்ளதையும், தோட்டக்கலை - மலைப்பயிர்கள் துறை ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ்,தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில் அவல் பூந்துறை பகுதியில் ரூ.75,000 மானிய உதவியுடன் சுமார் 1200 கனமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள நீர் சேமிப்பு கட்டமைப்பினையும்,

ஈஞ்சம்பள்ளி ஊராட்சியில் வேளாண்மை - உழவர் நலத்துறைசார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ்,சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் 21 பயனாளிகளுடன் கூத்தம்பாளையம் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள ஈஞ்சம்பள்ளி தரிசு நிலத்தொகுப்பினையும்  மற்றும் எழுமாத்தூர் பகுதியில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தினையும் நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு இருப்புவைக்கப்பட்டுள்ளதேங்காய் மற்றும் தேங்காய் பருப்புகளையும் பார்வையிட்டார்.

முன்னதாக,மாவட்டஆட்சித்தலைவர் ,நஞ்சைஊத்துக்குளிபகுதியில் செயல்படும் தமிழ்நாடுசிறுதொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் செயல்படும் தொழிற்பேட்டையினையும் நேரில் சென்றுபார்வையிட்டார்.

இந்தஆய்வின்போது ,மொடக்குறிச்சிஊராட் சி ஒன்றிய பெருந்தலைவர் எஸ்.கணபதி, மொடக்குறிச்சி வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் சுமித்ரா சண்முகப்பிரியா, உதவிசெயற்பொறியாளர்  சுந்தரம்,உதவி பொறியாளர்கள் .ரமேஷ்குமார், ர்கத்,மொடக்குறிச்சி வட்டாட்சியர் ரவி, ஊராட்சிமன்றத் தலைவர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


Tags:    

Similar News