ஊழியர்களுக்கு கொரோனா: கொடுமுடி தாலுக்கா ஆபீஸ் மூடல்

ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொடுமுடி தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.;

Update: 2021-05-11 16:09 GMT

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தேர்தல் பணிக்காக செல்லும் ஊழியர்களுக்கு மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் முகாம் அமைத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு சென்ற பணியாளர்கள் தேர்தல் முடிவுக்கு பின்னர் கடந்த சனிக்கிழமை மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானதில், கொடுமுடி தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரியும் நிலஅளவையாளர், சிவில் சப்ளை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், கிராம நிர்வாக அலுவலக உதவியாளர்கள் என 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தொற்று பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தாலுகா அலுவலகத்தில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டும், பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டுள்ளது. கொடுமுடி தாலுகா அலுவலகத்தில் ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தாலுகா அலுவலகம் ஒரு வாரத்திற்கு மூடப்படுவதாக தாசில்தார் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News