எழுமாத்தூர் மார்க்கெட் கமிட்டியில் ரூ.78.85 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் இன்று நடைபெற்றது.

Update: 2021-11-23 15:30 GMT

தேங்காய் பருப்பு.

ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் இன்று நடைபெற்றது.

இதில் எழுமாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரத்து 661 மூட்டைகளில் 80 ஆயிரத்து 480 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனர்.

இதில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.94. 90 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.108. 00 , சராசரி விலையாக ரூ.102. 59 காசுகள், இரண்டாம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.78. 26 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.103 , 00 சராசரி விலையாக ரூ.95. 75 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.78 இலட்சத்து 85 ஆயிரத்து 221 க்கு விற்பனையானது.

Tags:    

Similar News