அவல்பூந்துறை மார்க்கெட் கமிட்டியில் ரூ.2.88 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.;
ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 3 ஆயிரத்து 7 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பை 67 மூட்டைகளில் விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் முதல் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ100.00 க்கும், அதிகபட்ச விலையாக ரூ.106.00, சராசரி விலையாக ரூ.103.90 காசுகள், இரண்டாம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.75.16 காசுகள், அதிக பட்சமாக ரூ.94. 36 காசுகள், சராசரி விலையாக ரூ.92. 89 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ. 2 இலட்சத்து 88 ஆயிரத்து 319க்கு விற்பனையானது.