மொடக்குறிச்சி அருகே தேங்காய் வெட்டும் தொழிலாளி தற்கொலை

மொடக்குறிச்சி அருகே பச்சாம்பாளையத்தில் தேங்காய் வெட்டும் தொழிலாளி குருணை மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்

Update: 2021-11-21 16:15 GMT

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட மலையம்பாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் ஆண்டவர்(  48) இவர் தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார். இவருக்கு மது அருந்தம் பழக்கம் இருந்துள்ளது.  இதனால் ஏற்பட்ட  வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.வயிற்றுவலி தீருவதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஆண்டவர் கடந்த ஒரு மாதகாலமாக மது அருந்துவதை தவிர்த்திருந்தாராம்.

இந்த நிலையில் நேற்று மாலையில் வீட்டைவிட்டு வெளியில் சென்று விட்டுவந்த ஆண்டவர், வயிற்றுவலி தாங்கமுடியாமல் தான் குருணை மருந்தை சாப்பிட்டு விட்டதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, வாயில் நுரை தள்ளியபடி தரையில் விழுந்துள்ளார்.உடனே அவரை அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ்மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆண்டவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனை அடுத்து இறந்து போன ஆண்டவரின் மகள் மோகனபி்ரியா சம்பவம் குறித்து மலையம்பாளையம் போலீசாரிடம் இன்று மனு அளித்துள்ளார். மனுவில் தனது தந்தையி்ன் இறப்பில் எவ்வித சந்தேகமும் இல்லை என கூறியுள்ளார்.அவரது மனுவின் மீது மலையம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News