கொரோனா தொற்றில் இருந்து காக்க பைரவர் பூஜை

உலகில் பரவி வரும் கொரோனா தொற்றில் இருந்து உலக மக்களை காக்க அவல்பூந்துறை அடுத்த காரூத்து பாளையத்தில் பைரவா பீடத்தில் பைரவர் சுவாமிக்கு விபூதி மற்றும் செவ்வரளி பூ சிறப்பு பூஜை நடைபெற்றது.;

Update: 2021-05-06 05:15 GMT

கொரோனா தொற்று நோய் அதிகரித்து வரும் நிலையில் உயிர் பலியும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த அபாயகரமான சூழலில் இருந்து உலக மக்கள் பாதுகாத்திட வேண்டி பல்வேறு வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே உள்ள காரூத்துபாளையத்தில் பைரவா பீடம் உள்ளது. இந்த பைரவா பீடத்தின் விஜய் சுவாமிஜி தலைமையில் தமிழக அரசின் கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சிறப்பு யாக வேள்வி நடத்தப்பட்டது .

இந்த சிறப்பு யாக வேள்வி பூஜையில் விபூதி கொண்ட நெற்றியுடனும், உருத்திரஷ மாலை செவ்வரளி மலர் கொண்ட கண்டத்தோடும் அருள் பாலிக்கும் பைரவர் சுவாமிக்கு வேள்விகள் நடத்தப்பட்டது .

இவ்வேள்வி பூஜையில் ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் பிரச்சனையிலிருந்து மக்கள் மீண்டு வரவும் .கொரோனா எனும் நோயின் தாக்கத்திற்கு உள்ளாகி அதிகரித்து வரும் உயிர் பலிகளில் மக்களை பாதுகாத்திட வேண்டி சிறப்பு வழிபாடாக அபிசேஷக ஆராதனை நடைபெற்றது.

கொரோனா முன்னேச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடந்த சிறப்பு யாகவேள்வி பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து வழிபாட்டில் கலந்து கொண்ட பொது மக்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News