பெருந்துறை சிப்காட் பகுதியில் நள்ளிரவில் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு

பெருந்துறை சிப்காட் பகுதியில் புகை மற்றும் துர்நாற்றம் வருவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2024-02-11 10:45 GMT

சிப்காட் பகுதியில் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்.

பெருந்துறை சிப்காட் பகுதியில் புகை மற்றும் துர்நாற்றம் வருவதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் இருந்து நள்ளிரவில் அதிக புகையும் துர்நாற்றமும் ஏற்படுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

இதனை அடுத்து நள்ளிரவு ஒரு மணி அளவில் சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தலைமையில் 15க்கும் மேற்பட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர். ஆய்வின்போது, பெருந்துறை கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்ஜோதி செல்வராஜ், பொன்முடி ஊராட்சி மன்ற தலைவர் தங்கவேலு, சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் ராம்ஸ் என்கிற ராமசாமி, பேட்டரி பாலு, டாக்டர் யசோதரன், மணி, சக்தி, ரவிக்குமார், குமரேசன், ராஜேஷ்குமார், ஆனந்தன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நந்தகுமார், ரமேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவிக்கும்போது, இனிமேல் 24 மணி நேரமும் பல்வேறு கண்காணிப்பு குழு மூலம் கடும் புகை காற்று மாசு துர்நாற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அவ்வாறு விதிமுறை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Tags:    

Similar News