அந்தியூர் அருகே வீட்டின் பீரோவை உடைத்து ரூ.3 லட்சம், 22½ பவுன் நகை கொள்ளை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஒலகடத்தில் வீட்டின் பீரோவை உடைத்து ரூ.3 லட்சம் பணம், 22½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

Update: 2024-10-11 01:30 GMT

பணம், நகை கொள்ளை (கோப்புப் படம்).

அந்தியூர் அருகே ஒலகடத்தில் வீட்டில் பீரோவை உடைத்து ரூ.3 லட்சம் பணம், 22½ பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள ஒலகடம் தாண்டாம்பாளையம் வடக்கு வீதியைச் சேர்ந்தவர் உலகநாதன் (வயது 47). இவர் கொமாரபாளையத்தில் சாக்குப்பை தைக்கும் கடை வைத்து தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில், உலகநாதன், அவரது மனைவி இருவரும் வீட்டை பூட்டி சாவியை மாடிபடிக்கட்டுக்கு அடியில் மறைவாக வைத்து கடைக்கு நேற்று (10ம் தேதி) காலை சென்றுள்ளனர்.

பின்னர், மாலை வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும், வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில், இருந்த ரூ.3 லட்சம் பணம் மற்றும் ரூ.2¼ லட்சம் மதிப்புள்ள 21½ பவுன் நகை ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது.

பின்னர், இது குறித்த உலகநாதன் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் பவானி போலீஸ் துணை காவல் கண்காணிப்பாளர் சந்திரசேகர், அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் வெள்ளித்திருப்பூர் காவல் உதவி ஆய்வாளர் மேகநாதன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், வீட்டு சாவியை வைத்து விட்டு செல்வதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இக்கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News