ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயநிதி

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (2ம் தேதி) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.;

Update: 2024-08-02 06:15 GMT

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்த போது எடுத்த படம்.

Erode Today News - ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (2ம் தேதி) ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஈரோடு சோலாரில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா இன்று 2ம் தேதி) காலை நடைபெற்றது. ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து செயல்படுத்த இந்த அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த விழாவிற்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். 


பின்னர், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாசுக்கு பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தார். அவருடன், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சு.முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன் (ஈரோடு கிழக்கு), வெங்கடாசலம் (அந்தியூர்) ஆகியோர் உடன் இருந்தார். மேலும், இவ்விழாவில் திமுக கட்சியின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News