ஈரோட்டில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் முத்துசாமி மரியாதை

அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி, ஈரோட்டில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் முத்துசாமி வெள்ளிக்கிழமை (இன்று) மரியாதை செலுத்தினார்.

Update: 2023-09-15 03:30 GMT

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் முத்துசாமி மரியாதை செலுத்தினார்.

அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி, ஈரோட்டில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர் முத்துச்சாமி வெள்ளிக்கிழமை (இன்று) மரியாதை செலுத்தினார். 

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை (இன்று) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள அண்ணா சிலைக்கு, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான சு.முத்துசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


அவருடன், ராஜ்யசபா உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.சச்சிதானந்தன், முன்னாள் எம்பி கந்தசாமி, முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார், ஈரோடு மாநகர் திமுக செயலாளர் சுப்பிரமணியன், குமார் முருகேஷ், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், செல்லப் பொன்னி மனோகரன், மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிசாமி, ஈரோடு மாநகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு, வீ.சி.நடராஜன், குறிஞ்சி தண்டபாணி, வில்லரசம்பட்டி முருகேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் திருவாசகம் உள்ளிட்டோர் அண்ணா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News