ஈரோட்டில் மாவட்ட தொழில் மையம் சார்பில், ரூ.33.04 கோடி மதிப்பில் கடனுதவி

ஈரோட்டில் மாவட்ட தொழில் மையம் சார்பில், 47 நபர்களுக்கு ரூ.33.04 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

Update: 2023-09-20 10:30 GMT

மாவட்ட தொழில் மையம் சார்பில், பயனாளி ஒருவருக்கு கடனுதவினை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். அருகில், ஈரோடு ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளார்.

ஈரோட்டில் மாவட்ட தொழில் மையம் சார்பில், 47 நபர்களுக்கு ரூ.33.04 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி புதன்கிழமை (இன்று) வழங்கினார்.


ஈரோடு மாவட்ட தொழில் மையம் சார்பில், வங்கி கடனுதவி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலை வகித்தார். தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தலைமை வகித்து 47 நபர்களுக்கு ரூ.33.04 கோடி மதிப்பீட்டிலான கடனுதவி களை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, மாவட்ட தொழில் மையம் சார்பில், வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாடு திட்டம், பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப் படுத்துதல் திட்டம் மற்றும் தாட்கோ திட்டத்தின் கீழ் என 32 நபர்களுக்கு ரூ.7.12 கோடி மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய வங்கி கடனுதவியினையும் மற்றும் 14 நபர்களுக்கு ரூ.25.92‌ கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகளும் என 47 நபர்களுக்கு ரூ.33.04 கோடி மதிப்பீட்டிலான வங்கி கடனுதவி மற்றும் மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு முதலமைச்சர், தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக, எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறார்கள். அதன்படி, கடனுதவிகளை பெறுகின்ற தொழில் முனைவோர்கள் நல்ல முறையில் தொழில் முன்னேற்றம் அடைந்து தங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக் கொண்டு பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் சார்பில் மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையம், உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி, சுகாதாரமாக பராமரிப்பு மேற்கொண்ட சத்தியமங்கலம் உழவர் சந்தை, ஈரோடு நேதாஜி தினசரி மார்கெட், கள்ளுக்கடை மேடு, பத்ரகாளியம்மன் கோவில், நசியனூர், மதுர காளியம்மன் கோவில், மடத்துப்பாளையம் அங்கன்வாடி மையம் மற்றும் நஞ்சை ஊத்துக்குளி அம்மன் நகர் அங்கன்வாடி மையம் உள்ளிட்டவைகளுக்கு, தரச்சான்றிதழ்களை அமைச்சர் முத்துசாமி வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மணிகண்டன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார், மாவட்ட நியமன அலுவலர் (உணவு பாதுகாப்புத்துறை) தங்க விக்னேஷ், துணை இயக்குநர் (வேளாண்மை விற்பனை) மகாதேவன், தலைவர் (ஈரோடு மாவட்ட சிறுதொழில் சங்கம்) திருமூர்த்தி, வங்கியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News