மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் : அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.;

Update: 2023-07-27 05:00 GMT
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பம் பதிவு செய்யும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையினை அமைச்சர் முத்துசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனையின் உள்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாகவும் மற்றும் மருத்துவமனைக்கு நோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் வருகை புரிபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் மற்றும் அருகில் உள்ள மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைப்பது குறித்தும் மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன் பின்னர், ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சர்  முத்துசாமி வழங்கினார். உடன், பள்ளியின் செயலாளர் சிவனாந்தம், 35-வது வார்டு கவுன்சிலர் புவனேஸ்வரி பாலசுந்தரம், கோட்டை பகுதி துணைச் செயலாளர் பாலச்சந்தரம், பகுதி பிரதிநிதி வேலுமணி, வார்டு செயலாளர் வக்கீல் விஜி, மணிகண்டன், பூபதி, கர்சிப் சுப்பிரமணி, ரவிச்சந்திரன், பரமசிவம், மடிகார் சங்கத் தலைவர் பாஸ்கி (எ) பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News