கொடுமுடி வட்டத்தில் ரூ.1.88 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல்

Erode news- ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ரூ.50.52 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும் மற்றும் ரூ.1.88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-09-13 04:30 GMT

Erode news- கொடுமுடி அஞ்சூர் ஊராட்சியில் ஈரோடு முத்தூர் ரோடு முதல் தாதராக்காடு வரை தார்சாலை புதுப்பிக்கும் பணியினை அமைச்சர் முத்துசாமி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்த போது எடுத்த படம். உடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Erode news, Erode news today- கொடுமுடி வட்டத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ரூ.50.52 லட்சம் மதிப்பில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும் மற்றும் ரூ.1.88 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கும் நேற்று (13ம் தேதி) அடிக்கல் நாட்டினார். 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.50.52 லட்சம் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் நேற்று (12ம் தேதி) திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில், கொடுமுடி வட்டம், கரட்டாங்காட்டுப்புதூர், பூலாவலசு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.19.52 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள பால் கொள்முதல் நிலையத்தினையும், கொடுமுடி ஊராட்சி ஒன்றியம், அஞ்சூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் என ரூ.50.52 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, சிவகிரி பேரூராட்சியில் ரூ.1.12 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 18 கடைகளுடன், சுங்க வசூல் செய்யும் அறை, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, கேண்டீன், வாகனம் நிறுத்துமிடம், பேவர் பிளாக் தரை உள்ளிட்ட வசதிகளுடன் அருகிலுள்ள 29 கிராம விவசாயிகள் மற்றும் சிவகிரி பேரூராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் வணிக வளாகம் கட்டும் பணியினை துவக்கி வைத்தார்.


அதனைத் தொடர்ந்து, அஞ்சூர் ஊராட்சியில் ஈரோடு முத்தூர் ரோடு முதல் தாதராக்காடு வரை (பூலாவலசு கரட்டான்காட்டுப்புதூர் வழி) ரூ.75.55 லட்சம் மதிப்பீட்டில் 5.4 கி.மீ நீளத்திற்கு தார்சாலை புதுப்பிக்கும் பணி என மொத்தம் ரூ.1.88 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரெ.சதீஸ் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News