ஈரோட்டில் உள் விளையாட்டு அரங்கை திறந்து வைத்த அமைச்சர் முத்துசாமி..!

ஈரோடு சக்தி நகர் ஸ்போர்ட்ஸ் மற்றும் வெல்பேர் டிரஸ்ட் சார்பில் ரூ.35 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட உள் விளையாட்டு அரங்கை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

Update: 2024-05-27 03:30 GMT

உள் விளையாட்டு அரங்கை அமைச்சர் முத்துசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஈரோடு சக்தி நகர் ஸ்போர்ட்ஸ் மற்றும் வெல்பேர் டிரஸ்ட் சார்பில் ரூ.35 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட உள் விளையாட்டு அரங்கை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்.

ஈரோடு சக்தி நகர் ஸ்போர்ட்ஸ் மற்றும் வெல்பேர் டிரஸ்ட் சார்பில், ரூ.35 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்ட உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சக்திநகர் ஸ்போட்ஸ் மற்றும் வெல்பேர் டிரஸ்ட் கௌரவ தலைவர் குமாரசாமி தலைமை வகித்தார். தலைவர் ஆறுமுகம், செயலாளர் சச்சிதானந்தன், பொருளாளர் கைலாசபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

உள்விளையாட்டு அரங்கை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இவ்வரங்கில் பேட்மின்டன் (இறகுப்பந்து) மற்றும் கபாடி விளையாட்டு போட்டி நடத்தவும், விளையாடவும், பயிற்சி முகாம் நடத்திடும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பின்னர், விழாவில் சக்தி நகர் ஸ்போர்ட்ஸ் மற்றும் வெல்பேர் டிரஸ்ட் பொருளாளர் கைலாசபதி, கிராமப்புறங்களில் இதே போன்று உள் விளையாட்டு அரங்கு அமைக்க வேண்டும். அப்போதுதான் கிராமப்புற இளைஞர்கள் விளையாட்டில் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். நாடு பல விளையாட்டு வீரர்களை உருவாக்கும் என்றார். இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், ஈரோடு சி.என்.சி. கல்லூரி மற்றும் சோலாரில் பெரிய அளவில் உள் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன என்றார்.

இவ்விழாவில், பேட்மிண்டன் அசோசியேசன் ஆப் இந்தியா பேட்மிண்டன் அசோசியேசன் உறுப்பினர் அருணாசலம், ஈரோடு மாவட்ட பேட்மிண்டன் அசோசியேசன் தலைவர்  செல்லையன் (எ) ராஜா, ஈரோடு மாவட்ட பேட்மிண்டன் அசோசியேசன் செயலாளர் சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News