பவானி அருகே காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய மனநலம் பாதித்தவர்: தீயணைப்பு குழுவினர் மீட்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய மனநலம் பாதித்த நபரை தீயணைப்பு குழுவினர் மீட்டனர்.

Update: 2024-07-29 13:00 GMT

காவிரி ஆற்றின் நடுவே சிக்கித் தவித்த மனநலம் பாதிக்கப்பட்ட பெருமாளை தீயணைப்புத் துறையினர் பரிசலில் மீட்டனர்.

 பவானி அருகே காவிரி ஆற்றின் நடுவே சிக்கிய மனநலம் பாதித்த நபரை தீயணைப்பு குழுவினர் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (35). இவர், பெற்றோரை இழந்த நிலையில், சற்று மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்து வந்தார். நேற்று பவானி புதிய பேருந்து நிலையம் அருகே காவிரி நீரேற்று நிலையம் பின்புறம் காவிரி ஆற்றின் நடுவில் உள்ள பாறையில் படுத்திருந்தார்.

இந்நிலையில், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்தால், ஆற்றில் நடுவே இருந்த பாறையை வெள்ளம் சூழ்ந்தது. இதனால், வெளியேற முடியாமல் பெருமாள் விடிய, விடிய தவித்து வந்தார்.

இதனையடுத்து, காவிரி ஆற்றின் நடுவே பாறையில் ஒருவர் தவித்து வருவதாக பவானி தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் இன்று தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆர்.முருகேசன் (பொ) தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்கள் பரிசலில் பாறை இருந்த பகுதிக்கு சென்றனர்.

பின்னர், அங்கு தவித்துக் கொண்டிருந்த பெருமாளை தீயணைப்பு வீரர்கள் பரிசல் மூலம்  ஏற்றிக்கொண்டு கரைக்கு மீட்டு வந்தனர். பசியால் தவித்த பெருமாளுக்கு உணவளித்த தீயணைப்பு படையினர் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News