ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவ தொழில் ஆங்கில பயிற்சி
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு மருத்துவத் துறை பயிற்சி, இணையத்தில் பதிவு செய்ய அழைப்பு;
Namakkal district news today, Namakkal news today live, Namakkal news, Namakkal news in tamil, Latest namakkal newsநாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு மருத்துவ தொழில் சார்ந்த ஆங்கிலத் தேர்வுக்கான பயிற்சிக்கு இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார், தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன, இப்பயிற்சிக்கான தகுதிகளாக விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும், மேலும் பி.எஸ்சி., - எம்.எஸ்சி., நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்சி., நர்சிங், மற்றும் பொது செவிலியர் மருத்துவ படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு மூன்று லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும், இரண்டு மாத கால அளவுக்கு நடைபெறும் இப்பயிற்சியில் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவுத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும், பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் அயல் நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும், இப்பயிற்சியில் சேர விரும்புவோர் தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்ய வேண்டும்.