சத்தியமங்கலத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவையினர் மே தின கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.

Update: 2023-05-01 10:15 GMT

சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.

சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.

உழைப்பாளர்கள் தினமான மே தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம் அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்கம் பேரவையின் சார்பாக கழக கொடி ஏற்று விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு தலைமை தாங்கி சட்டமன்ற உறுப்பினர் பண்ணாரி அண்ணா தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், சத்தி நகர செயலாளர் ஓ.எம். சுப்பிரமணியம், பவானிசாகர் ஒன்றிய செயலாளர்கள் வி.ஏ.ழனிசாமிகள், டி.எஸ்.பழனிசாமி, சத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, சத்தியமங்கலம் அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் தலைவர் குமரேசன், செயலாளர் நந்தகுமார், பொருளாளர் செல்வன், பிரபாகரன், ஜீவா, மணி, தனபால், சிவக்குமார், உதயகுமார், பிரவீன் குமார், செல்வன் பழனிசாமி, நசீர் பாஷா, அபுதாஹீர் குப்புசாமி, சீனிவாசன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News