ஈரோடு சூரம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு அன்னதானம்..!
ஈரோடு சூரம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு, அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.;
மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
Erode News, Erode Today News, Erode Live Updates - ஈரோடு சூரம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு, அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈரோடு சூரம்பட்டி பாரதிபுரத்தில் மகா மாரியம்மன் மற்றும் பரிவார கோவில்கள் உள்ளன. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி விநாயகர் வழிபாடு மற்றும் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. அன்று மதியம் காவேரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் வரப்பட்டது. மாலையில் முளைப்பாரி மற்றும் சீர் கூடை எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்து, முதல் கால பூஜை ஆரம்பிக்கப்பட்டது. 8ம் தேதி காலை இரண்டாம் கால பூஜையும், இரவில் மூன்றாம் கால பூஜையும் நடந்தது. இதைத்தொடர்ந்து, நேற்று காலை சக்தி விநாயகர் மகா மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பிறகு மகா அபிஷேகம் தச தரிசனம் கோ பூஜை நடந்தது.
விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.