குருவரெட்டியூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
கைது செய்யப்பட்ட தேவராஜ்.
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, குருவரெட்டியூர் பழைய ஈஸ்வரன் கோவில் பின்புறம், கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சென்னம்பட்டி கோணர்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் (67) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து, அவரிடம் இருந்து 100 கிராம் அளவுள்ள கஞ்சா, இருசக்கர வாகனம் மற்றும் செல்போனை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் கொளத்துரை சேர்ந்த சக்தி என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.