ஈரோட்டில் மின்சாரம் தாக்கி ஆண் மயில் உயிரிழப்பு

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி 2 வயது ஆண் மயில் உயிரிழந்தது.;

Update: 2023-07-03 11:00 GMT

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஆண் மயில்.

ஈரோடு சங்குநகர் அருகே தென்றல் நகர் 7வது வீதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஈரோடு தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையறிந்த ஈரோடு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மயிலின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்தது 2 வயது ஆண் மயில் என்பதும், உணவு தேடி பறந்து வந்தபோது, அங்கு இருந்த மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி மயில் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து இறந்து போன மயில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் வனப்பகுதியில் அடக்கம் செய்யப்படும், என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News