ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி ஆர்ப்பாட்டம்

Erode news- ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-04-30 19:45 GMT

Erode news- ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் தாலி ஏந்தி மகிளா காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Erode news, Erode news today- ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

18வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 2 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்தது. அடுத்தகட்டமாக ராஜஸ்தான் மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலி அறுக்கப்படும் என ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் சார்பில் ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஈரோடு மாநகர் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி தீபா தலைமை தாங்கினார். ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் திருச்செல்வம் ஆர்பாட்டத்தை துவக்கி வைத்து கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், தாலிக்கொடியை ஏந்தி பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்கள் விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக், மாவட்ட பொது செயலாளர் கனகராஜன், தமிழ்நாடு காங்கிரஸ் (டிசிடியு) மாநிலத் துணைத் தலைவர் குளம் ராஜேந்திரன், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் முகமது அர்சத், ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் ஜூபைர் அகமது, துணைத் தலைவர் பாஷா, நெசவாளர் அணி மாவட்டத் தலைவர் மாரிமுத்து, என்சிடபிள்யூசி மாவட்ட தலைவி கிருஷ்ணவேணி, ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் சூரியா சித்திக் உள்பட காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News