கடம்பூர் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த மக்ளா யானை

சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனப்பகுதியில் மக்ளா யானை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-03 04:30 GMT

கடம்பூர் வனச்சரக அலுவலகம்.

The forest department is investigating the death of a Magna elephant in Kadambur forest near Sathyamangalam In Erode District | சத்தியமங்கலம் அருகே கடம்பூர் வனப்பகுதியில் மக்ளா யானை இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, கேர்மாளம், கடம்பூர் டி.என்.பாளையம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் வனப்பகுதியிலேயே தங்களுடைய உணவுகளை தேடிக்கொண்டு, குளம்-குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரை குடித்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. 

இந்நிலையில், கடம்பூர் வனச்சரகத்துக்குட்பட்ட எக்கத்தூர் வனக்காவல் சுற்று காப்புக்காடு வனப்பகுதி கச்சப்பள்ளம் என்ற இடத்தில் கடம்பூர் வனக்காப்பாளர் அர்த்தநாரிஸ்வரர் தலைமையில் வனத்துறையினர் திங்கட்கிழமை (நேற்று) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மக்னா யானை இறந்து கிடந்துள்ளது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வன கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான டாக்டர் குழுவினர் வனத்துறையினருடன் அங்கு சென்று இறந்து கிடந்த மக்னா யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். 

பின்னர், யானையின் உடல் மற்ற விலங்குகளுக்கு உணவாக அங்கேயே விடப்பட்டது. யானைக்கு 35 வயதிருக்கும் எனவும், நோய் தாக்கி இறந்ததா அல்லது சண்டையிட்டு இறந்ததா என தெரியவில்லை. பிரேத பரிசோதனை முடிந்த பிறகே யானையின் இறப்பு குறித்து காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News