கோபிசெட்டிபாளையம்: பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் காதல் ஜோடி தஞ்சம்

கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.;

Update: 2022-02-11 23:30 GMT
கோபிசெட்டிபாளையம்: பாதுகாப்பு கேட்டு போலீசாரிடம் காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்த காதல் ஜோடி மெய்கீர்த்தி - கோகிலவாணி.

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையம், பிச்சாண்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் மெய்கீர்த்தி. எம்எஸ்சி பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கோபி கரட்டடிபாளையம் பகுதியில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது அதே கல்லூரியில் படித்த அளுக்குளி பகுதியை சேர்ந்த கோகிலவாணி என்பவருக்கும் காதலித்து வந்துள்ளனர்.

இதற்கு கோகிலவாணி வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கவே, கோகிலவாணி வீட்டை விட்டு வெளியேறி, காதலருடன் சென்று கூகலூர் அருகே உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார். நேற்று கோபி  அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு, இருவரும் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து, மகளிர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் மேனகா, இரண்டு தரப்பு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags:    

Similar News