ஈரோடு மாவட்டத்தில் மே 1-ல் மதுக்கடைகளை மூட உத்தரவு
மே தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் வருகிற மே 1-ம் தேதி மூடப்படும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.;
மே தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் வருகிற மே 1-ம் தேதி மூடப்படும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட பொது விடுமுறை தினங்களில் மதுக்கடைகளை மூடுவது வழக்கம். இதேபோல் தேர்தல் நேரங்களிலும், விடுமுறை விடப்படுவது உண்டு. மேலும் உள்ளூர் விடுமுறை மற்றும் ஒருசில பொது விடுமுறைகளுக்கு சில மாவட்டங்களுக்கு மட்டும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும்.
விடுமுறை நாட்களில் தடையை மீறி யாராவது சட்டவிரோதமாக மது விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்நிலையில், மே தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் வருகிற மே 1-ம் தேதி மூடப்படும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு வருகிற 1-ம் தேதி மது விற்பனை இல்லாத நாளாக அனுசரிக்க வேண்டும் என அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால் அன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், அதனுடன் இயங்கும் பார்கள், கிளப்கள் மற்றும் ஓட்டல்களில் உள்ள பார்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும். அன்றைய தினத்தில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.