கோபி அருகே சிறுத்தை நடமாட்டம்: மக்கள் தெரிவிக்க வனத்துறை அழைப்பு
ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெருமுகை கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கோபி அருகே பெருமுகை கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் குறித்து செல்போன் மூலம் தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக வனத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெருமுகை கிராமம் கரும்பாறை பகுதியில் கரும்பாறை முதல் சஞ்சீவிராயர் குளம் நீர்வழித்தடத்தில் (மேய்ச்சல் துறை பகுதி அருகில் கொடிக்கால்) சிறுத்தை நேற்று (27ம் தேதி) நடமாட்டம் இருப்பதாக அந்தியூர் வனத்துறையினரால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம். கால்நடைகள், ஆடு மற்றும் நாய்களை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர். எனவே ஊர் பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் சிறுத்தை நடமாட்டம் தெரிந்தால் வனத்துறை அதிகாரிகள் 9994633264, 9942281665, பெருமுகை ஊராட்சி நிர்வாகம் 9994343745, கிராம நிர்வாக அதிகாரி 9698832485, காவல்துறை 9025691865, பொதுப்பணித்துறை 8248359998 ஆகிய செல்போன் எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.