ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சொற்பொழிவு..!
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் சிறப்புச் சொற்பொழிவு இன்று நடைபெற்றது.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் சிறப்புச் சொற்பொழிவு இன்று (25ம் தேதி) நடைபெற்றது.
ஈரோடு அடுத்த திண்டல் அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான சிறப்புச் சொற்பொழிவு இன்று (25ம் தேதி) நடைபெற்றது.
இதில், வளர்ந்து வரும் தொழில் நுட்ப கருத்தரங்க தொடரில் பிக் டேட்டா பகுப்பாய்வு பற்றிய விரிவுரை வழங்கப்பட்டது. துறைத் தலைவர் எஸ்.முருகானந்தம் இதனை துவக்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத் துறையின் உதவிப் பேராசிரியர் பி.பிரபாகரன் கலந்துகொண்டு அதிக அளவு அதிவேக தரவுத் தொகுப்புகளிலிருந்து நுண்ணறிவுகளைச் சேகரிக்கவும் செயலாக்கவும் பயன்படுத்தும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
நிறைவில், மாணவர்களின் சந்தேகங்களுக்குப் பதிலளித்தார். கல்லூரியின் தாளாளர் பி.டி.தங்கவேல், முதல்வர் ஹெச்.வாசுதேவன் ஆகியோர் கலந்துகொண்ட மாணவ, மாணவிகளை பாராட்டினர்.
தகவல் தொழில்நுட்பம் (IT) என்பது கணினி அமைப்புகள், மென்பொருள், நிரலாக்க மொழிகள் மற்றும் தரவு மற்றும் தகவல் செயலாக்கம் மற்றும் சேமிப்பகம் ஆகியவற்றை உள்ளடக்கிய தொடர்புடைய துறைகளின் தொகுப்பாகும். தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் (ICT) ஒரு பகுதியாக IT அமைகிறது.