ஈரோட்டில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Erode news- தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தக் கோரி ஈரோட்டில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-06-21 04:30 GMT

Erode news- ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு  வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

Erode news, Erode news today- தமிழகத்தில் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தினை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தக் கோரி ஈரோட்டில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியிருக்கிறது. அந்த மூன்று சட்டங்களும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களை அமல்படுத்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும்.

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்ந்து வருகிறது. வழக்கறிஞர்கள் மற்றும் அவரது குடும்பங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதால் மத்திய, மாநில அரசுகள் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News