அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் மண் சரிவு: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் இரவு முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2024-08-15 01:30 GMT

மலைப்பாதை சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கடந்த சில  நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று (14ம் தேதி) இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த நிலையில், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பர்கூர் தாமரைக்கரை பகுதியில், மண் சரிவு ஏற்பட்டது.

இதனால், நேற்று இரவு முதல் அந்தியூரில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர் செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதேபோல் மைசூரில் இருந்து அந்தியூர் வரக்கூடிய அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக, தமிழகம் -கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று, மண் சரிவு ஏற்பட்ட இடங்களில், பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை அள்ளும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News