கவுந்தப்பாடியில் பட்டத்தரசி அம்மன், அண்ணமார் சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
கவுந்தப்பாடி அருகே தென்காட்டுபாளையம் காலனியில் பட்டத்தரசி அம்மன், அண்ணமார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கவுந்தப்பாடி அருகே தென்காட்டுபாளையம் காலனியில் பட்டத்தரசி அம்மன், அண்ணமார் சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த கவுந்தப்பாடி அருகே உள்ள தென்காட்டுபாளையம் காலனியில் பட்டத்தரசி அம்மன், அண்ணமார் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 13ம் தேதி கும்பாபிஷேக யாகசாலை முகூர்த்தக் கால் நடுதல் கங்கணம் கட்டுதல் ஆகியவற்றுடன் தொடங்கியது.
தொடர்ந்து, 25ம் தேதி புதன்கிழமை பவானி நதியில் இருந்து பம்பை வாத்தியங்கள் முழங்க பக்தர்கள் தீர்த்தக் குடங்கள் எடுத்து வந்து சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. நேற்று காலை 8 மணிக்கு மங்கல இசை விநாயகர் வழிபாடு பிரம்மா விஷ்ணு ருத்ர சக்திகள் சந்தான பூஜை நடத்தப்பட்டு விநாயகர், பட்டத்தரசி அம்மன், அண்ணமார் சுவாமி தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக தொடர்ந்து பக்தர்கள் மீது புனித தீர்த்தங்கள் தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழக வீட்டு வசதி வாரிய துறை அமைச்சர் சு.முத்துசாமி, திமுக வடக்கு மாவட்ட செயலாளர் என் நல்லசிவம், ஒன்றிய செயலாளர் கேப்டன் துரை, பாராளுமன்ற உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி. வெங்கடாசலம், பவானி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பண்ணன், பவானி ஒன்றிய துணைச் செயலாளர் சத்தியமூர்த்தி, முத்தமிழறிஞர் கலைஞர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாளர் சம்பத் மற்றும் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கவுந்தப்பாடி தென்காட்டுபாளையம் காலனி திருப்பணிக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.