கோபி: கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா

Erode news- ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-03-28 08:15 GMT

Erode news- பகவதி அம்மன் கோவில் குண்டம் விழாவில் எடுக்கப்பட்ட படம்.

Erode news, Erode news today- கோபி அருகே உள்ள கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கணக்கம்பாளையம் ஊராட்சியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் குண்டம் திருவிழா கடந்த மார்ச் 14ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

கடந்த 26ம் தேதி (நேற்று முன்தினம்) தீர்த்தக்குடம் உற்சவம், 27ம் தேதி (நேற்று) காலை பச்சை பூஜையும் மாலையில் அரண்மனை பொங்கல் வைத்தலும் நடைபெற்றது. இரவு 60 அடி கொண்டதற்கு தீ மூட்டப்பட்டு 28ம் தேதி (இன்று) காலை 7.15 மணியளவில் பூசாரிகள் மூர்த்தி, பவுன், கோவில் நிர்வாகிகள் நவநீதன், சக்திவேல் ஆகியோர் முதலில் குண்டம் இறங்கினர்.

அதைத்தொடர்ந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என 3000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் நின்று குண்டம் இறங்கினர். குண்டம் விழாவில் பங்களாப்புதூர் போலீசார் மற்றும் கோபி தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அதை தொடர்ந்து, 29ம் தேதி (நாளை) மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடைபெறும் அதைத் தொடர்ந்து இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் திருவீதி உலா வருதல் நடைபெறும்.வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News