காங்கிரஸூக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கில் கமல்ஹாசன் இன்று பிரசாரம்
ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் ஈரோடு மாவட்டத்துக்கு வரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள நாளை (இன்று) ஈரோடு வருகிறேன். ஒன்று கூடுவோம். வென்று காட்டு வோம் என்று பதிவிட்டுள்ளார்.
பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள்:-
முதல் நாளாக இன்றைய தினம் கமல்ஹாசன் ஈரோடு கருங்கல்பாளையம், காந்தி சிலை அருகே மாலை 5 மணிக்கு பிரசாரத்தை தொடங்குகிறார். தொடர்ந்து, மாலை 5.30 மணிக்கு சூரம்பட்டி நான்கு முனை சாலை சந்திப்பு, மாலை 6 மணிக்கு சம்பத் நகரில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு வீரப்பன்சத்திரம், இரவு 7 மணிக்கு அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வாக்குச் சேகரிக்க உள்ளார்.