கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை

கொங்கர்பாளையத்தில், திருமணத்திற்கு சென்ற போது, வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.;

Update: 2022-03-07 02:00 GMT
கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை

பைல் படம்

  • whatsapp icon

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். அரிசி ஆலை அதிபர். நேற்று முன்தினம், இவரது மகள் கிருத்திகாவின் திருமணம் சத்தியமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு, ஜெயக்குமார், மனைவி கவிதா மற்றும் மகன் சந்தோஷ் ஆகியோர் குடும்பத்துடன், வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

பின்னர், திருமணம் முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய போது,  படுக்கையறை கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 25 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து, பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் மோப்பநாய், கைரேகை தடவியல் நிபுணர்கள் மற்றும் சிசிடிவி கேமராவின் மூலம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News