குமாரபாளையத்தில் வேலி கற்கள் சரிந்து தொழிலாளி காயம்
லாரி மீது சரக்கு வாகனம் மோதியதால் வேலி கற்கள் சரிந்து தொழிலாளிக்கு பலத்த காயம்;
குமாரபாளையம் அருகே நடந்த சாலை விபத்தில் கூலித் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார். சென்னையிலிருந்து கேரளா நோக்கி ரப்பர் ஏற்றி சென்ற லாரி, சேலம்-கோவை புறவழிச்சாலையில் சிவசக்தி நகர் பகுதியில் பயணித்தது. இந்த லாரியை ஆத்தூர் சேர்ந்த சுரேஷ் (62) ஓட்டிக் கொண்டிருந்தார். இதன் பின்னால், சங்ககிரியிலிருந்து நசியனூர் நோக்கி நில வேலைகளுக்கான 8 அடி உயர வேலி கற்கள் ஏற்றி சென்ற சரக்கு வாகனம் வந்தது. அதை நசியனூர் பகுதியை சேர்ந்த இளவரசன் (27) ஓட்டியிருந்தார்.
இந்த சரக்கு வாகனத்தில், வேலி கற்கள் மீது அமர்ந்து பயணித்த நசியனூர் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் (51), எதிர்பாராத விதமாக விபத்திற்கு ஆளானார். லாரி ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், பின்னால் வந்த சரக்கு வாகனம் நேரடியாக லாரியின் பின்புறத்தில் மோதியது. இதனால், மீது அமர்ந்து வந்த குமாரின் கால்களில் கற்கள் சரிந்து விழுந்து, இரு கால்களும் தீவிரமாகக் காயமடைந்தது. உடனடியாக அவரை மீட்டு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்த விபத்து குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.