மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இ-சேவை மூலம் விண்ணப்பிக்க அழைப்பு

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;

Update: 2023-07-14 02:46 GMT

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா வியாழக்கிழமை (இன்று) க்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இ-சேவை தளம் வழியாக மாற்றுத்திறனாளிகள் கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக் கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர உதவித் தொகை ஆகிய 5 திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த சேவைகளைப் பொதுமக்கள் பயன்படுத்த தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது http://tnesevai.tn.gov.in/citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஜூலை மாத இறுதி வரை இ-சேவை மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பித்து மாற்றுத் திறனாளிகள் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News