ஈரோடு ஆர்டி நேஷனல் கலை அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா
ஈரோடு ஆர்டி நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.;
ஈரோடு ஆர்டி நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
பெண்களின் சாதனை, கலாச்சாரம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து சாதனைகளையும் கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும் நேற்று முன்தினம் (மார்ச் 8) உலக மகளிர் தினம் (International Women's Day) கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், ஈரோடு ஆர்டி நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஆர்டி கல்விக் குழுமங்களின் தலைவர் செந்தில்குமார் விழாவிற்கு தலைமையேற்றர். செயலாளர் ராதா செந்தில்குமார், நிர்வாக இயக்குநர் ராகுல், சிஇஓ கீர்த்தனா ராகுல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். விமலானந்த் விழா ஏற்பாடுகள் செய்து சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்பு விருந்தினராக ஆர்டி இண்டர்நேஷனல் பள்ளியின் தமிழ்த்துறைத் தலைவர் கீதா சங்கர் பெண்களின் சுயமரியாதை பற்றியும், பெண்கள் வீட்டிற்கும் நாட்டிற்கும் அச்சாணி போன்றவர்கள் என்ற கருத்தை சிறப்பாக எடுத்துரைத்தார்.
பின்னர் மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவியர்களும், பேராசிரியர்களும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.